சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்ட "அனுபுதி" சொகுசு பெட்டியில் சென்னை செல்ல கட்டணம் ரூ.2 ஆயிரத்து 145- ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கம் நிலையில், அந்த பெட்டியில் பயணிக்க இன்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
கோவை, ஜனவரி 28

கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் மதியம் 3.25 மணிக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் நின்று சென்னையை இரவு 10.15 மணிக்கு சென்றடையும். அதே ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு கோவையை வந்தடையும்.
அந்த ரயிலில் 7 குளிர்சாதன பெட்டிகள், ஒரு கூடுதல் வசதி (எக்சிகியூட்டிவ்) குளிர்சாதன பெட்டி மற்றும் 2 ஜெனரேட்டர் பெட்டிகள் உள்ளன. இந்த நிலையில் கூடுதலாக "அனுபுதி" என்ற சொகுசு பெட்டி ஒன்று நேற்று முன்தினம் முதல் சதாப்தி விரைவு ரயிலில் இணைக்கப்பட்டது.
அந்த பெட்டியில் இருக்கைக்கு பின்புறம் தொடு திரையுடன் கூடிய எல்.சி.டி. டெலிவிஷன் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ரயில் நிலையத்தின் பெயர், அடுத்து வரப்போகும் இடம், ரயிலின் வேகம் ஆகியவையும் அதில் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.